Rescue of a baby thrown in a thornbush

Advertisment

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை சாலையோர முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் திருச்சியில்பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் தேவதானம் பகுதியில் சாலையோரம் உள்ள முட்புதரில் வினோத சத்தம் கேட்ட நிலையில், அந்தப் பகுதியில் சென்ற சிலர் எட்டிப் பார்த்தனர். அப்பொழுது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை புதரில் வீசப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்தஅம்மு,வளர்மதி என்ற இரண்டு பெண்கள் குழந்தையை மீட்டு சைல்டு லைன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அக்குழந்தைக்கு மருத்துவசிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை முப்பதரில் வீசியது யார் என்பது தொடர்பாக கோட்டை காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.