திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 14 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் கிரிவல பாதையைச் சுற்றி பல்வேறு கோயில்கள் இருக்கின்றன. மாதத்தின் முக்கிய நாட்களில் இங்கு கிரிவலத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடுகின்றனர். இந்த நிலையில் பொம்மை விற்பதாக திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் பிச்சை எடுக்க வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 14 சிறுவர்கள்மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் போலீசார் சேர்த்துள்ளனர். இதில் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைத்த இடைத்தரகர்கள் ஓட்டம் பிடித்த நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.