Skip to main content

கோரிக்கை வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்; ட்விட்டரில் பதில் கொடுத்த முதல்வர்

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

nn

 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் இன்று சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

 

இதனால் ரசிகர்கள் ஆவலுடன் இசைக் கச்சேரியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் சென்னை பனையூரில் இசைக் கச்சேரி நடைபெற இருந்த அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

 

இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மான், "எனது அன்பான நண்பர்களே... மோசமான வானிலை மற்றும் தொடர் மழையின் காரணமாக, எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பிற்காக அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி இசை நிகழ்ச்சி வேறொரு தேதிக்கு மாற்றப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

nn

 

மேலும் 'கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டமைப்பை தமிழக அரசு மேற்கொள்ளும்' என நம்புவதாக ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் டிவீட்டை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதில் 'கலை நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் உலக தரத்தில் கலைஞர் அரங்கம் நிறுவப்பட உள்ளது. ஹோட்டல், உணவு விடுதி, பார்க்கிங் வசதிகளுடன் கட்டப்படும் கலைஞர் அரங்கம் நகரின் புதிய கலாச்சார சின்னமாக இருக்கும்' என தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்