நாடு முழுவதும் 19 மாநிலங்களில் கரோனாபாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும்கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சென்னையில் கரோனாபரவலைத் தடுக்க ஆர்.சி - பி.சி.ஆர் பரிசோதனைகளைஅதிகப்படுத்தசென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறைக்கு தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசி பணிகளை விரிவுபடுத்தவும் தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.