Skip to main content

திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரிக்கை - நாளை விசாரணை

Published on 13/08/2018 | Edited on 13/08/2018
t


மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை ஆகிய தமிழகப் பிரச்னைகள் குறித்து  ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார். இதைத் தொடர்ந்து, நார்வேயிலிருந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெங்களூரு  விமான நிலையம் வந்த அவரை  லுக் அவுட் சர்க்குலர் பிறப்பித்துள்ளதாகக் கூறி  கைதுசெய்து நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர்.

 

அதையடுத்து ஆகஸ்ட் 11ஆம் தேதி  சென்னை சைதாப்பேட்டை பெருநகர 11வது மாஜிஸ்திரேட்டு நீதிபதி  முன்பு திருமுருகன் காந்தியை    ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உத்தரவு கோரினர். திருமுருகன்காந்தியை சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி, தேவைப்பாட்டால்  24 மணி நேரம் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்தார். 

 

இதைத் தொடர்ந்து அவரை  சென்னை எழும்பூரில் உள்ள பழைய  ஆணையர் அலுவலகத்தில் வைத்து  விசாரணை நடத்தினர். இதன்பின்பு, 2017 செப்டம்பர் மாதம் கைதாகி சிறையிலிருந்து வெளியில் வந்தபோது, அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்த வழக்கில்  ராயப்பேட்டை காவல் நிலையத்தினர்  திருமுருகன்காந்தியை கைது செய்வதாக கூறி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

 

இந்நிலையில்  திருமுருகன் காந்தியை சட்டவிரோதமாக கைது செய்யபட்டுள்ளதாகவும், அவரது கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென அவரது தந்தை காந்தி தரப்பில் இன்று ஆட்கொணர்வு மனுவை   மூத்த வழக்கறிஞர்  என்.ஆர்.இளங்கோ நீதிபதிகள் சி.ட்டி.செல்வம், எம்.நிர்மல்குமார் அமர்வில் முறையீட்டார். அதற்கான மனுத்தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும், திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான கோரிக்கையை நாளை விசாரிப்பதாக தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

சீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு?... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும், பிரபாகரன் உடன் இருந்தது குறித்தும், ஈழப் பிரச்சனைகள்  தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவையில்லாமல் மேடைதோறும் பேசி வருகிறார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை மட்டகளப்பு எம்.பி. யோகேஸ்வரன், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, சீமான் போன்ற அரசியல்வாதிகள் எல்லா பிரச்சனையும் தீர்ந்த பிறகு, வெறும் பேச்சு பேசி வருவதாக தெரிவித்தார். 
 

srilanka mp

 

seeman


 

film



மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்று கேள்வி எழுப்பினார் யோகேஸ்வரன். விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்களாக எப்போதும் இருந்துள்ளார்கள். அப்படி இருக்கும் போது ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இங்குள்ளவர்கள் பேசுகிற பேச்சால் தங்களுக்குத் தான் பிரச்சனை என்றார். அதோடு, சீமான் தாங்கள்தான் கொன்றதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள்  ஆதாயத்திற்கு பேசும் பேச்சால் தங்களுக்கு தான் பிரச்சனை என்று வருந்தியவர். இவர்கள் தொடங்கி வைத்துவிட்டு உட்கார்ந்து விடுவார்கள் பாதிப்பு அங்குள்ள மக்களுக்கு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பேசினார். 

 

 

Next Story

’கொசுக்கள் மூலம் என்னை கொல்லப்பார்த்தார்கள்’ - முகிலன் பகீர் பேட்டி

Published on 27/09/2018 | Edited on 27/09/2018
mu

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முகிலனின் பங்கு மிக முக்கியமாக பேசப்பட்டது. அலங்காநல்லூரில் அந்த கடைசி நாளில் இவரை மட்டும் குறிவைத்து குண்டுகட்டாக தூக்கி வேனில் வைத்து எவ்வளவு அடித்து சித்தரவதை செய்யமுடியுமோ அவ்வளவு செய்ய அவர் உடல்ரிதியாக மிக பாதிப்படைய வேறு வழியின்றி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட நாம் அங்கு சென்று போலிஸ் காவலை மீறி அவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டோம்.


          அதற்கு பின் அடுத்தடுத்து தமிழகத்தில் மக்கள் பிரச்சனையான ஹைட்ரோஹார்பன் ,நெடுவாசல் ஸ்டர்லைட் பிரச்சனை, மணற்கொள்ளை, மீத்தேன் என அனைத்து மக்கள் போராட்டங்களிலும் முகிலனே முதலாக நிற்பார். இவரை போன்று  தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய சர்வதேச அரசியலை பாமரர்களுக்கு கொண்டுசென்றதில் முக்கியமானவர் திருமுருகன் காந்தி இவர் இனரீதியான மொழிக்கு எதிரான பாஜக வின் போக்கையும் தமிழக மக்களுக்கு எதிரான நீட் போன்றவற்றையும் மக்களுக்கு பாதகமான  ஒவ்வொரு திட்டத்தையும் விளக்கி சமூக ஊடகங்களிலும் போராட்டங்களின் மூலமாகவும் அதன் உண்மையான நோக்கங்களை வெளிகொண்டுவருவதில் பெரிதும் முனைப்பாக இருவரும் இருந்தார்கள்.
இதில் முகிலன் தூத்துக்குடி போராட்டத்தின் போது இவரை கைது செய்த போலிஸார் பின்பு ஜாமீனில் விடுதலையாகி அடுத்தநாள் இவரை ஆறுபேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றதாக தகவல் வர அது மீடியாவில் பரவ உடனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அதை கண்டிக்க பின்பு சென்ற வருடம் அக்டோபர் 18 அன்று இவர்மேல் பல்வேறு வழக்குகள் போட்டு முகிலனை கைது செய்தனர்.   374ல் சிறைவாசத்திற்கு  பிறகு செப்டம்பர் 26 புதன் அன்று மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆன முகிலன் நம்மிடம் பேசினார்.

 

mu2

 

அப்போது அவர்,   ‘’நான் பல்வேறு மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்து வந்தாலும் இந்தமுறை என்னை பாளையங்கோட்டை தனிமை சிறையில் போட்டு அருகில் சாக்கடையை ஓடவிட்டு  ஆயிரக்கணக்கான கொசுக்கடியினால் என் போர்வையே காலையில் இரத்தகறை படிந்து இருக்கும் அளவுக்கு வைத்திருந்ததை பார்த்து வைகோ  என்னை வந்து பார்க்கும் போது மிகவும் வருத்தபட்டார்கள்.   அதற்கு பிறகு வள்ளியூர் கோர்ட்டில் நீதிபதியிடம் என் சட்டையை கழட்டி காட்டினேன்.  நானும் ஒவ்வொருமுறை வாய்தாவிற்கு போகும்போதெல்லாம் நீதிமன்றத்தில் காவல்துறை செய்யும் கொடுமைகளை சொல்லாமல் இல்லை.  அவர்களும் பலமுறை போலிசாரை கண்டித்துள்ளனர். வேறு சிறைக்கு மாற்ற உத்தரவிட்டனர். உடனே மதுரை சிறைக்கு இரவு 12 மணிக்கு மாற்றினார்கள்.

   இங்கு வந்த பிறகு அதைவிட கொடுமை யாரிடமும் பேசகூடாது என்று தனிமை சிறைக்கு கொண்டு சென்று நான் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் வயிற்றுவலியால் அவதிப்படுவேன். உடல் மெலிய தொடங்கியது . பதினொரு முறை கொல்ல முயற்சித்தார்கள்.  இதையெல்லாம் உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் சொல்லி மன்றாடினேன். இதைக்கேட்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிறைக்கே வந்து ஆய்வு செய்தது இந்திய வரலாற்றிலேயே முதல் முறை.

 

mu1

 

 இப்போது இருக்கும் அரசு எடப்பாடி அரசு அல்ல பாஜக அரசு அவர்கள் தமிழகத்தில் என்னை போன்றவர்களை கைது செய்து உடல்ரீதியாக பலம் இழக்க செய்து அவர்களுக்கு மனரீதியாகவும் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து அவர்களை முழுவதுமாக முடக்குவது என்ற அஜண்டாவை வைத்திருக்கிறார்கள்.

 

 தற்போதுகூட எனது வழக்கறிஞர்கள் என்னிடம் தோழர் திருமுருகன் காந்திக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதாகவும் வயிற்றுபோக்கு போன்றவற்றால் அவதிப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர்கள் சொன்னதாக சொன்னார்கள் மற்றும் பத்திரிக்கை மற்றும் சமூக ஊடகங்களில் வந்தவண்ணம் இருக்கிறது. இது ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தலின் படி மக்களுக்கு உண்மை தன்மையை எடுத்துரைக்கும் எழுத்தாளர்கள் மற்றும் திருமுருகன் காந்தி என்னை போன்றவர்களை மனரீதியாக தொடர்ந்து காயப்படுத்துவது சிறையில் வைத்து சாப்பாட்டில் உடலை பாதிக்கக் கூடிய மருந்துகளை கலந்து கொடுத்து அவர்களை பலவீனப்படுத்துவது என்று புதிய முறைகளை பின்பற்ற தொடங்கிருக்கிறார்கள். 

 

 இது பாசிச ஆட்சியாளர்களால் தான் இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுவார்கள்.  மராட்டியம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கல்புர்க்கி போன்றவர்களை சுடுவது இல்லையென்றால் அவர்களை தீவிரவாதிகள் நக்சலைட்டுகள் என்று சிறையில் தள்ளி அவர்களை இதுபோல் சித்திரவதை செய்வது என்ற பாசிச மனப்பாங்கை இந்த எடபாடி அரசு மூலம் தன் செயல்பாட்டை செயல்படுத்த தொடங்கிருக்கிறது.  மத்திய பாஜக பாசிச அரசு சமீபத்தில் மாணவி சோபியா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பது நிதர்சனம். இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள் நடக்கப் போகிறதோ என்ன கலவரம் நடக்கபோகிறதோ தெரியவில்லை’’ என்று முடித்தார் முகிலன்.