Request to ban heavy vehicles

மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்திலும், மாலையில் வீடு திரும்பும் நேரத்திலும் கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisment

அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலை சாந்தி பணிகளுக்காக கனரக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் இயக்கப்படுகின்றன.

Advertisment

பள்ளி வாகனம் செல்லும் நேரங்களான காலை 7 மணி முதல் 10 மணி மாலை 3 மணி முதல் 6 மணி வரை வரை கனரக வாகனங்கள் இயக்கக் கூடாது என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே பணியில் இருந்த ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால் தற்பொழுது சிமெண்ட் தொழிற்சாலை வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் அதிக அளவில் சாலைகளில் கட்டுப்பாடு இன்றி செல்கின்றன.

Advertisment

இதனால் காலையில் மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்திலும், மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் நேரத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதோடு கனரக வாகனங்கள் எதுவும் மெதுவாக செல்வதில்லை. பலத்த ஹாரன் சத்தத்தோடு வேகமாகவே பயணிக்கின்றன.

எதிர்வரும் காலங்களில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் தற்போது உள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.