Skip to main content

அரசு உத்தரவுப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா பணியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

Request to annamalai Univ Registrar to keep the differently abled people safe from covid

 

அரசு உத்தரவுப்படி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் கரோனா காலத்தில் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி, கடலூர் மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவனை சந்தித்து மனு ஒன்று அளித்துள்ளனர். அதில், கரோனா நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு அலுவலகப் பணிகளில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உட்பட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இவ்விலக்கு மறுக்கப்படுகிறது.

 

இது அரசின் அறிவிப்புக்கு எதிரானது. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு அலுவலகப் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். மேலும் இதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி செவிலியர் ஜென்மராக்கினி கட்டாயப் பணியின் காரணமாக நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த நோய் உள்ளிட்ட பாதிப்புக்களைக் கொண்டுள்ள மேற்படி செவிலியருக்கு சரியான மருத்துவம் கூட வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு உள்ளனர்.

 

மாற்றுத்திறனாளியான ஜென்மராக்கினிக்கு சிறப்பு மருத்துவக் கவனிப்பு அளித்திட வேண்டும். மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனைத்துப் புலங்களிலும் பணியாற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவருக்கும் அரசு அறிவிப்பின்பேரில் பயணப்படி ரூ.2,500 ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இதனை மாற்றி ஒவ்வொரு மாத ஊதியத்துடன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.