இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை சுமார் 10.45க்கு தனி விமானம்மூலம் சென்னை வருகிறார்.
சென்னை வரும் குடியரசுத் தலைவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் சென்றுசி.எம்.சி மருத்துவமனையின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பின்னர் சென்னை திரும்பி இரவு ஆளுநர் மாளிகையில் தங்கவுள்ளார். அதேபோல்நாளை நடக்கவிருக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் 160 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
இந்திய குடியரசுத் தலைவரின் வருகை காரணமாக சென்னை மற்றும்வேலூரில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.