republic day coronavirus prevention tamilnadu government announced

Advertisment

குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.

தமிழக அரசின் அறிவிப்பில், 'சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 26- ஆம் தேதி அன்று காலை 08.00 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். கரோனா காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று மாவட்ட ஆட்சியர்கள் உரிய மரியாதை அளிக்க வேண்டும்.சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினைக் கருத்தில்கொண்டு கரோனா பரவாமல் தடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. குடியரசு தின விழாவைப் பார்க்க மக்கள், மாணவர்கள், குழந்தைகள் நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.