சென்னை உயர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழா! - கரோனாவால் சாகச நிகழ்ச்சி மிஸ்ஸிங்..!

Republic Day at the Chennai High Court!

குடியரசுதினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் சி.ஐ.எஸ்.எப். படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், தமிழக டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள், உயர் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நீதித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

வழக்கமாக நடைபெறும் சி.ஐ.எஸ்.எப் வீரர்களின் சாகச நிகழ்ச்சி கரோனா பரவல் தடுப்பு விதிகள் காரணமாக இந்த ஆண்டு நடத்தப்படவில்லை.

highcourt republic day
இதையும் படியுங்கள்
Subscribe