Republic Day celebrations in Trichy!

Advertisment

73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா, நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து வானத்தில் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அதன்பின் நடந்த காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் சிவராசு ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பாகப் பணியாற்றிய 130 காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. அதேபோல், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் 489 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.