நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று (26.01.2024) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை 8 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

Advertisment

அதேபோன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisment

- படங்கள்: ஸ்டாலின், குமரேஷ்