Skip to main content

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? - பதிலளித்த ரஜினிகாந்த்

Published on 21/08/2023 | Edited on 22/08/2023

 

Journalists who wrote questions regarding Yogi Adityanath falling on his feet; Rajinikanth replied

 

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்தார். நான்கு நாட்கள் இமயமலையில் தியானம் செய்த அவர் பல்வேறு அரசியல்  பிரமுகர்களையும் சந்தித்திருந்தார். இந்த நிலையில் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''ஜெயிலர் திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். ஜெயிலர் படத்தை வெற்றிப் படமாக்கிய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை ஒரு நல்ல படத்தை எடுங்க என ஊக்குவித்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கும், ஒவ்வொரு சீனும் ஒவ்வொரு ஃபிரேமும் ரசிச்சு ரசிச்சு இயக்கிய நெல்சனுக்கும், திறமையோடு வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், மூத்த நடிகர்களுக்கும், ஒரு வெற்றி படத்தை தன்னுடைய அருமையான பாடல்களாலும் பிரம்மிக்க வைக்கும் பின்னணி இசையாலும் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படமாக்கிய அனிருத்துக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்'' என்றார்.

 

அரசியல்வாதிகளைச் சந்தித்தது தொடர்பான கேள்விக்கு, “அரசியல்வாதிகளை சந்தித்தது நட்பு ரீதியானது தான்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'நீங்கள் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது சர்ச்சையானதே' என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ''ஒரு சன்னியாசி ஆகட்டும்; ஒரு யோகி ஆகட்டும் அவர்கள் வயதில் நம்மை விட சிறியவர்களாக இருந்தால் கூட அவர்களுடைய காலில் விழுவது என்னுடைய பழக்கம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன்'' என்றார்.

 

தொடர்ந்து பிரதமர் குறித்து கேள்விகளை செய்தியாளர்கள் முன்னெடுக்க, ''நான் அரசியல் பேச விரும்பவில்லை'' எனப் பதிலளித்துவிட்டு கிளம்பினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முகமது ஷமியின் சாதனையால் சாதிக்கப் போகும் கிராமம்!

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

The village is going to achieve with the achievement of Mohammed Shami!

 

இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. மனைவியிடம் விவாகரத்து, சூதாட்ட புகார்கள் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய முகமது ஷமி, காயத்தாலும் சில ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார். சூதாட்டப் புகார்களில் குற்றமற்றவர் என நிரூபணம் ஆகி, காயமும் முழுமையாக குணமடைந்து புத்துணர்ச்சியுடன் இந்திய அணிக்கு திரும்பினார். காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில், அனுபவ வேகப்பந்து வீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு வந்தார். சிறப்பான செயல்பாட்டின் காரணமாக உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்தார்.

 

முதல் நான்கு போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் பிடிக்காத முகமது ஷமி, நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது லீக் போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக இடம் பிடித்தார். உலக கோப்பையில் பங்கு பெற்ற முதல் ஆட்டத்திலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி இந்தத் தொடரில் மட்டும் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி, ஒட்டு மொத்தமாக 4 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முக்கியமாக அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் எனும் புதிய சாதனை படைத்தார். இதனால் இவரை கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில் இவரின் சாதனைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் முகமது ஷமியின் சொந்த ஊரான சகஸ்பூர் அலிநகர் கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சகஸ்பூர் அலிநகர் கிராமத்தில் மிகச் சிறிய அளவிலான ஒரு கிரிக்கெட் மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக, ஷமியின் கிராமம் அமைந்திருக்கும் அம்ரோஹா மாவட்டத்தின் ஆட்சியர் ராஜேஷ் தியாகி இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

Next Story

“இந்த முறை உலகக்கோப்பை நமக்குத்தான்” - நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

This time the World Cup is for us actor Rajinikanth believes

 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (15.11.2023) நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா -  நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரை சதம் கடந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு பாதியில் வெளியேறினார். 65 பந்துகளை சந்தித்த கில் 79 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.

 

இதனையடுத்து வந்த விராட் கோலி 117 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸும் சதத்தைக் கடந்து 70 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். கடைசிக்கட்ட ராகுலின் அதிரடியான 39 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. நியூசிலாந்து தரப்பில் சவுதி 3 விக்கெட்டுகளும், போல்ட் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

 

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வேயை 13 ரன்களிலும், ரச்சினையும் 13 ரன்களிலும் முகமது ஷமி வெளியேற்றினார். ஆனால் சிறப்பாக ஆடிய மிட்செல் சதமடித்தார். அடுத்து வந்த சாப்மேனை குல்தீப் அவுட் ஆக்க, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மிட்செல் ரன் ரேட் அழுத்தத்தால் சிக்சர் அடிக்க முயன்று ஷமி பந்தில் 134 ரன்களில் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

This time the World Cup is for us actor Rajinikanth believes

 

இதற்கிடையே இந்த போட்டியை நடிகர் ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் தனது மனைவி லதாவுடன் சேர்ந்து நேரில் கண்டு ரசித்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டி குறித்து பேசுகையில், “முதலில் கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டேன். அதன் பின்னர் நியூசிலாந்து தரப்பில் 2, 3 என விக்கெட்டுகள் விழுந்ததும் ஆட்டம் நன்றாக சென்றது. கண்டிப்பாக இந்த முறை கப் (உலக கோப்பை) நமக்குத்தான். இந்தப் போட்டியில் வெல்ல 100 சதவீதம் முகமது ஷமிதான் காரணம்” என தெரிவித்தார்.