
ராணிப்பேட்டையில் மேம்பாலத்தின் கீழே சிமெண்ட் குழாயில் மர்ம நபர் ஒருவரின் சடலம் மிதப்பதாக வெளியான சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது அங்கிருந்தோரைத்திகைப்பில் ஆழ்த்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ளது கல்லாறு மேம்பாலம். இந்த மேம்பாலத்தின் கீழ் ஆற்று நீரில் கிடந்த ராட்சச சிமெண்ட் குழாயில் மர்ம நபர் ஒருவரின் உடல் கிடந்துள்ளது. பாலத்தில் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் இதனைக் கண்டு, சடலம் ஒன்று கிடப்பதாகப் போலீசாருக்குத்தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்தப் பகுதிக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நேரத்தில் திடீரென்றுசடலம் எனக் கருதப்பட்ட நபரின் உடலில் அசைவு தென்பட்டது. இதனால் அங்கிருந்த மக்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.
இறுதியில் அது சடலமல்ல ஒருவர் அங்கு படுத்திருந்தது தெரிய வந்தது. திடீரென அந்த நபர் இறங்கி நடக்கத்தொடங்கினார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அந்த நபரின் பெயர் செம்பி என்பது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். தொடர்ந்து போலீஸ் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் என நினைக்கப்பட்ட ஒருவர் திடீரென எழுந்து நடந்தது அந்தப் பகுதியில் சற்றுபரபரப்பை ஏற்படுத்தியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)