publive-image

Advertisment

இன்று (13.04.2021) திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ''தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை ஓராண்டு விழாவாக - தொடர் விழாவாக நடத்திய எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு 1979இல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’என்று பெயர் மாற்ற மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு மாற்ற அரசு ஆணை பிறப்பித்தார். அதனை இப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு - நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் - ‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்?

publive-image

யாரைத் திருப்தி செய்ய? என்ன பின்னணி - விஷமத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். உடனடியாக அதை இணையதளத்தில் இருந்து நீக்கி, ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி'' எனக் கூறியிருந்தார்.

Advertisment

Periyar EVR Road

‘சென்னை கிராண்ட் வெர்ஸ்டன் டிரங்க் ரோடு சாலை’ பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு' என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை அது ஈ.வெ.ராசாலை என அழைக்கப்படுவதுண்டு. தமிழக அரசின் ஆவணங்களில் கிராண்ட் வெஸ்டன் டிரங்க் சாலை என்றுதான் உள்ளது” என தமிழக நெடுஞ்சாலைத் துறை தெரிவித்திருந்தது.

publive-image

Advertisment

இந்நிலையில், ''தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979-ல் பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்டபோதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் Grand Western Trunk Road என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா? அல்லது, தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா?

எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரப்பூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க'' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.