Advertisment

Repeal laws -that deceive- farmers -SDPI protest

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறுதரப்பினரும் போராடிவருகின்றனர்.

அந்த வகையில், நேற்று மாலை(24-09-2020) எஸ்.டி,பி,ஐ கட்சிசார்பாக மத்திய அரசு அலுவலகம்முன்பு வேளாண் மசோதா எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு போராட்டம்நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் வேளாண் மசோதா சட்ட நகலைக்கிழித்து போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அப்போது "மத்திய அரசே! விவசாயிகளை வஞ்சிக்கின்ற சட்டங்களை ரத்து செய்!" எனக் கோஷம்எழுப்பினர். மேலும், போராட்டத்தில் ஒருபகுதியினர், காய்கறிகளை மாலையாகக் கோர்த்து கழுத்தில் போட்டுக்கொண்டு வேளாண் மசோதாவிற்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர்.