Repair of the District Collector's office lift - those trapped inside are distressed!

Advertisment

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான லிஃப்டில் பழுது ஏற்பட்டு பாதியில் நின்றதால் பதற்றம் நிலவியது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அமைச்சர் கணேசன் பங்கேற்ற நிலையில், முக்கிய பிரமுகர்களுக்கான லிஃப்டில் இரண்டாம் தளத்தில் இருந்து சிலர் தரைதளத்திற்கு இறங்கினர். கீழே வந்துசேர்ந்த லிஃப்ட் பழுதாகி கதவுகள் திறக்கவில்லை.

இதையடுத்து, லிஃப்டின் கதவுகளைத் திறக்க வெளியில் இருந்து பலர் உருட்டுக்கட்டை மற்றும் கம்பிகள் மூலம் முயற்சி மேற்கொண்டனர். அது பலனளிக்காத நிலையில், மீட்புப் படையினர் வந்து, லிஃப்டின் கதவுகளைத் திறந்து உள்ளே இருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர்.

Advertisment

இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.