Skip to main content

கூட்ட நெரிசல்... ரெம்டெசிவிர் மருந்து விற்கும் இடம் மாற்றம்!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

Remtacivir drug relocation in Chennai!

 

தமிழகத்தில் இரண்டாம் அலை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. தற்போது ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உறவினர்களை வெளியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வர பரிந்துரைகின்றனர். ஒரு டோஸ் ரெம்டெசிவிர் 1,500 ரூபாய் என இருக்கும் நிலையில் கள்ளச் சந்தையில் இதன் விலை பல்லாயிரக்கணக்கில் கூடி உள்ளது.

 

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம் டெசிவிர் மருந்து விற்பனை நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாவது நாளான நேற்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து ரெம்டெசிவிரை வாங்க நோயாளிகளின் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிகாலையிலேயே குவிந்தனர். அறிவிக்கப்பட்ட நேரத்தில் மருந்துகள் வழங்கப்படாததால் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களால் சிறிது நேரம் கூச்சம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் டோக்கன் பெற்றவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து ரெம்டெசிவிர் மருந்தினை வாங்கி சென்றனர். அதிகபட்சமாக ஒரு நபருக்கு 6 டோஸ் வரை மட்டுமே கொடுக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி வரை மருந்து விநியோகிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், 5 மணிக்குப் பிறகும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வற்புறுத்தியதால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

Remtacivir drug relocation in Chennai!

 

இன்று அதே மருத்துவமனை வளாகத்தில் மக்கள் அதிகம் குவிந்துள்ள நிலையில், கள்ளச்சந்தையில் டோக்கன்கள் விநியோக்கிப்படுவதாக அங்கு மருந்து வாங்க குவிந்த மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 3000 ரூபாய், 4000 ரூபாய் பெற்றுக்கொண்டு டோக்கன் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக இடைவெளியின்றி அங்கு மக்கள் ரெம்டெசிவிர் மருந்து வாங்க உயிரை பணையம் வைத்து காத்திருக்கும் நிலையில் மருந்துக்கான டோக்கன் கள்ளச்சந்தையில் முறைகேடாக விநியோகிப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அதிக மக்கள் கூட்டம் கூடிவருவதால் மருந்து விற்பனை செய்யும் இடம் மாற்றப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில்  2 கவுன்ட்டர்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

100 ரூபாயில் மருத்துவப் புரட்சி; டாடாவின் மைல்கல் சாதனை  

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
100 rupees to cure cancer; Tata's milestone achievement

உலகில் மிகவும் கொடுமையான நோய்களில் ஒன்றாக கருதப்படுவது புற்றுநோய். தீர்க்க முடியாத அல்லது எளியோரால் சிகிச்சை எடுக்க முடியாத அளவிற்கு மிகக் கொடூரமானதாகக் கருதப்படுகிறது. விலை உயர்ந்த மாத்திரைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் எடுத்துக் கொண்ட பிறகு அதிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். அதிலும் முதல் நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதிலிருந்து மீள்வது எளிது என்பவையெல்லாம் மருத்துவத் துறையின் கூற்றுகளாக இத்தனை வருடங்கள் இருந்து வருகிறது.

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள் உலகை புதிய பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் நிலையில், மருத்துவத்துறையிலும் சில புதிய புரட்சிகள் அபரிமிதமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேன்சர் சிகிச்சைக்கு பல்லாண்டு காலமாகவே சிகிச்சைக்கான தீர்வு மற்றும் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை குறைத்து உயிர் வாழ்தலை நீடிக்க வைப்பது போன்றவை மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக நீடித்து வந்தது.

இந்தியாவில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் ஒன்பது லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. உலகில் பல்வேறு மூலைகளிலும் புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளுக்கான ஆய்வுகள் அனுதினமும் நடைபெற்று வருகிறது. இதுவரை அதற்கான முழு தீர்வு எட்டப்படவில்லை என்றே கூறலாம்.

100 rupees to cure cancer; Tata's milestone achievement

இந்நிலையில், மும்பையின் டாடா மெமோரியல் ஹாஸ்பிடல் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தனர். எலிகளை வைத்து நடைபெற்ற மருத்துவச் சோதனையில் அந்த மருந்து வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் மீண்டும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளும் மருத்துவ முறைகளில் ஏற்படும் பக்க விளைவுகளை 50% குறைப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர் பிளஸ் சியூ என்ற அந்த மாத்திரை, இந்திய தர நிர்ணய ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த உடனே சந்தைகளில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் குறிப்பிடத்தகுந்த விஷயமாக புற்றுநோய் மருத்துவம் என்றாலே விலை உயர்ந்தது என்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தானது நூறு ரூபாய் என்ற குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளதுதான்.

Next Story

பாலினம் கண்டறியும் கும்பல்; அதிகாரிகளைக் கண்டதும் ஓட்டம்!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Gender identity gangs; When he saw the officers, he ran

தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் சட்டவிரோதமாக கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்த கும்பல் அதிகாரிகளை பார்த்ததும் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே சட்ட விரோதமாகக் கருக்கலைப்புகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் என்ற கிராமத்தில் உள்ள ஓம் சக்தி மெடிக்கலில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என ஸ்கேன் மூலம் சட்ட விரோதமாகத் தெரியப்படுத்தப்படுவதாகவும் கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலன் மற்றும் காவல்துறையினர் அந்த மெடிக்கலுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்படும் கருவி மற்றும் கருக்கலைப்புக்கு பயன்படுத்திய மருந்துகள் ஆகியவை இருந்தன. மெடிக்கலின் உரிமையாளரான மணிவண்ணன் மற்றும் அந்த மெடிக்கலில் மருந்தாளுநராக பணிபுரிந்த கௌதமி, இடைத்தரகர்கள் தினேஷ், கண்ணதாசன் ஆகிய நான்கு பேரை பிடித்தனர்.

இந்தநிலையில் இதேபோல தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கிவந்த ஒரு கும்பல் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சட்டவிரோதமாக சோதனை செய்து தெரிவித்து வந்ததாக புகார் எழுந்தது. மாவட்ட நிர்வாகத்திற்கு இதுதொடர்பான ரகசியத் தகவல் கிடைத்த நிலையில் அந்த வீட்டிற்கு அதிகாரிகள் திடீர் சோதனைக்காக சென்றனர்.

அதிகாரிகளை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து  சொல்வது மட்டுமல்லாது, கருக்கலைப்பு உள்ளிட்ட செயல்களும் அங்கு நடந்திருக்கலாம் என அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பணத்திற்காக சட்டவிரோத செயலில் ஈடுபட்ட  இடைத்தரகர் ஒருவரை பிடித்த மருத்துவக் குழு, அவரை போலீசில் ஒப்படைத்துள்ளது. மேலும் அந்த கும்பல் விட்டுச் சென்ற இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.