Skip to main content

''சர்கார்'' போஸ்டரை உடனடியாக நீக்கவேண்டும்!! நடிகர் விஜய்க்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்!!

Published on 05/07/2018 | Edited on 06/07/2018

 

SARKAR

 

 

 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும்  ''சர்கார்'' எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் விஜய் புகைபிடிப்பது போன்று வெளியான போஸ்டரை உடனடியாக இணையதளம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சன் பிக்க்சர் கலாநிதிமாறன், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

 

அண்மையில் வெளியான ''சர்கார்'' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துவந்தனர்.

 

 

 

 

இந்நிலையில் அந்த புகைப்பிடிக்கும் காட்சியை வெளிப்படுத்தக்கூடிய அந்த போஸ்டரை எல்லா இணையதளத்திலிருந்தும் நீக்கவேண்டும் என சன் பிக்க்சர் தலைவர் கலாநிதிமாறன், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தமிழக சுகாதாரதத்துறை பிரிவில் இயங்கும் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

மேலும் அந்த நோட்டீஸில் புகையிலை பயன்பாட்டை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் திரைத்துறையும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்