
தர்மபுரி அருகே ஆக்கிரமிப்பு விவசாய நிலத்தை அகற்ற முயன்றதால் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே தீக்குளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்மபுரியில் உள்ள காரிமங்கலம் என்ற ஊரில்தும்பலஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புறம்போக்கு மேய்ச்சல் நிலத்தில் சில ஏக்கர் நிலத்தைவிவசாயி ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பொழுது அதிகாரிகளுக்கும் விவசாயிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டநிலையில் சின்னசாமி என்கிற அந்த விவசாயி திடீரென தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டுதீ வைத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்தஅப்பகுதிமக்கள்அவரை தீக்காயங்களுடன் மீட்டு உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்துபாலக்கோடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன்அதிகாரிகளை கூட்டிச் சென்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற நிலையில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலே தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us