Advertisment

வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள கந்தவேல் நகர் பகுதியில் உள்ள குடிசை வீடுகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று இடமாக துரைப்பாக்கம் கண்ணகி நகர் மற்றும் அம்பத்தூர், அயப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் அங்கு வசித்து வந்த போது மக்கள் இன்று காலி செய்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு அழைத்து செல்லும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் செய்தனர். மேலும் அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள பழைய வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர்.