Advertisment

சர்கார் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்

sa

Advertisment

எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நடிகர் விஜய் நடித்த தீபாவளிக்கு திரைக்கு வந்த சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.

அதிமுகவினரின் போராட்டத்தால் தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் சர்கார் படம் நிறுத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களின் முன்பு போராட்டங்களும் வலுத்து வரும் நிலையில் சர்கார் படத்தின் மறுதணிக்கை இன்று காலையில் நடைபெற்றது. சென்னையில் தணிக்கை அதிகாரி லீலா மீனாட்சி தலைமையிலான குழுவினர் மறுதணிக்கை செய்தனர். அப்போது சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கப்பட்டன. இதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை பணி நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று பிற்பகலில் திரையிடப்படும் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது என்று கூறப்படுகிறது.

sarkar vijay
இதையும் படியுங்கள்
Subscribe