
சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாதி ரீதியிலான பெயர்களைக் கொண்ட நீர் நிலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு அண்மையில் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெறும்தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்கள் நீக்கப்படும் என அறிவித்தது வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தநடவடிக்கையும்வரவேற்பைப்பெற்றுள்ளது.
தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்தப் பெயர் மாற்றத்திற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்பத்தூர் மண்டலம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்திலிருந்த வண்ணான் குளம், ‘வண்ணக் குளம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Follow Us