Removal of AIADMK executives involved in Villupuram Incident

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர்,அதன் அருகேயுள்ள திருமதுரை கிராமத்தைசோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவா். அவர் தன் வீட்டிலேயே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். 95 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடியவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார்.

Advertisment

Advertisment

மாணவியின் குடும்பத்தாரோடு இருந்த முன்விரோதம் காரணமாகவே மாணவி கொடூரக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் இருவரையும்கட்சியிலிருந்து நீக்கி, அதிமுக தலைமை சார்பில்ஓபிஎஸ்- இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், விழுப்புரம், சிறுமதுரை புதுக்காலனி கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்த கலியபெருமாள், திருமந்துரை காலனி கிழக்கு கிளை கழக மேலமைப்பு பிரதிநிதி பொறுப்பிலிருந்த கே. முருகன் ஆகிய இருவரும் நீக்கப்பட்டதாகவும்,கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவர்களை கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்குவதாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது.