/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/REMDE444_0.jpg)
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் இன்று (14/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொது மக்களின் நலன் கருதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் (கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள வளாகம்) இரண்டு கவுண்டர்கள் அமைத்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் ரெம்டெசிவிர் மிகக் குறைந்த விலையில் 26/04/2021 முதல் வழங்கப்பட்டுவருகிறது.
தற்போது பொதுமக்களின்வசதிக்கேற்ப 15/05/2021 சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் ரெம்டெசிவிர் மருந்தானது ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள சிறப்பு விளையாட்டு ஆண்கள் விடுதியில் வழங்கப்பட உள்ளது. தினசரி 300 நபர்களுக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஐந்தாவது நுழைவு வாயில் (மை லேடி பூங்கா) மூலமாகஉள்ளே அனுமதிக்கப்பட்டு, மருந்து வாங்கிய பின்னர் நான்காவது நுழைவு வாயில் (மை லேடி பூங்கா) வழியாக வெளியேற அனுமதிக்கப்படுவர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து, பொறுமைகாத்து மருந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம். தயவுசெய்து இடைத்தரகர்கள் எவரையும் அணுக வேண்டாம் எனபணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு அறிவிப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)