Advertisment

சுகாதரத்துறை துணை இயக்குனரகம் இடமாற்றம்; அனைத்துக் கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Relocation of Deputy Directorate of Health; Demonstration by all parties

Advertisment

நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரிவினைக்கு முன்பாக முதன்மை நகரமான சங்கரன்கோவிலில் செயல்பட்டுவந்தது சுகாதரத்துறையின் துணை இயக்குனரகம். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் ஒருங்கிணைந்திருந்த காலத்திலிருந்தே இந்த இயக்குனரகம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார நகரங்களின் தொழில் நிமித்தம் செயல்பட்டு வருகிறது. மருத்துவர்கள் செவிலியர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று சுமார் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இந்தத் துணை இயக்குனரகத்தில் பணியாற்றி வருகின்றனர்.

தவிர விவசாயம், விசைத்தறி தனியார் பள்ளிகள், சிறு குறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் தொழில் நிமித்தமாகதேவையான சுகாதாரச் சான்றிதழ்களைப் பெற்று பயனடைந்து வந்தனர். நகரிலேயே இந்த அலுவலகம் இருப்பதால் அதிகாரிகள் தாமதமின்றி ஆய்வுசெய்யும் பணியும் சீராக நடந்து வந்திருக்கிறது.

தற்போது, சங்கரன்கோவில் நெல்லையிலிருந்து தென்காசியோடு இணைக்கப்பட்டுவிட்டதால், தென்காசி தலைமையிடத்தில் ஏற்கனவே சுகாதாரத் துறையின் இயக்குனரகம் இருந்தும் சங்கரன்கோவில் துணை இயக்குனரகம் தென்காசி மாற்றப்படுவதை அறிந்த நகர தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் ஆட்சேபனை தெரிவித்தன.

Advertisment

அதிகாரிகளின் இச்செயலையும் இயக்குனரகம் மாற்றப்படுவதையும் கண்டித்து சங்கரன்கோவிலில், நேற்றிரவு தி.மு.கஉள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் பொறுப்பாளர்களும்தொண்டர்களும்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நகரின் தி.மு.கபிரமுகரும் முன்னாள் அமைச்சருமான தங்கவேலுவின் தலைமையில் தி.மு.கநகரச் செயலர் சங்கரன் முன்னிலையில் ம.தி.மு.க.வின் மாவட்டச் செயலர் ராஜேந்திரன் தொடங்கி வைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க.வின் ஆறுமுகச்சாமி, சி.பி.எம்.மின் முத்துப்பாண்டி, அசோக்குமார், சி.பி.ஐ.யின் குருசாமி காங்கிரஸ் கட்சியின் உமாசங்கர், ஃபார்வர்டு பிளாக் கட்சி, வி.சி.க., த.ம.மு.க., மனிதநேய கட்சி மற்றும் பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Ad

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ம.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், சுகாதார துணை இயக்குனரகம் மாற்றப்படுவதால் நகரம் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் நகர மக்கள் பாதிக்கப்படுவதோடு, இயக்குனரகத்தின் பணியாளர்களும் பயண நெருக்கடிக்குள்ளாக நேரிடும். மக்களுக்கான இந்த இயக்குனரகம் தென்காசிக்கு மாற்றப்படுவதை உள்ளூர் அமைச்சர் கண்டு கொள்ளவில்லை என்று பேசினார்.

nellai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe