This is religious harmony!

Advertisment

தமிழகம் என்றுமே மத நல்லிணக்கத்தில் இருந்து சற்றும் விலகியதில்லை என்பதை அடுத்தடுத்து நடக்கும் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருவிழா, குடமுழுக்கு என்றாலும், அருகாமை கிராமங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தங்களின் நட்பையும், உறவையும் மேம்படுத்தி, நாங்கள் எப்போதும் அண்ணன், தம்பி, மாமன் மச்சான் தான் என்று மேளதாளங்களோடு சீர் கொண்டு வந்து மதநல்லிணக்கத்தைச் சீர்தூக்கி வைத்திருக்கிறார்கள்.

This is religious harmony!

Advertisment

இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாகத் தான் புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தில் உள்ள முத்தையா சுவாமி ஆலய குடமுழுக்கிற்கு ஜமாத்தார்கள் பழங்கள் நிறைந்த தட்டுகளில் பணமும் வைத்து ஊர்வலமாக வந்து சீர் கொடுத்து உறவை மேம்படுத்தியுள்ளனர்.