Advertisment

நிவாரணப் பணிகள்; திமுகவினருக்கு கனிமொழி எம்.பி. வேண்டுகோள்!

Relief works Kanimozhi MP for DMK Request

திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழியின் பிறந்தநாளை (ஜனவரி 5 ஆம் தேதி) முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னை சிஐடி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொள்வார். இதனால் அவரை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் வருகை தருவார்கள். மேலும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவரது பிறந்தநாளை விழாவாகக் கொண்டாடுவார்கள்.

Advertisment

இந்நிலையில் எனது பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்திக்க வருவதையும், வாழ்த்து பொருட்கள் அனுப்புவதையும் தவிர்க்க வேண்டுமாறு கனிமொழி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்ற மாதம் தொடர் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சென்னையில் வெள்ளம் வடிவதற்குள் மற்றுமொரு பேரிடராக, தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதி அதிக பாதிப்புக்குள்ளானது.

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பல்வேறு கட்டங்களாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்து இயல்புநிலை திரும்பிட களத்தில் எல்லோரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இச்சூழலில் எனது பிறந்தநாள் அன்று நண்பர்கள் மற்றும் திமுகவினர் என்னைச் சந்திக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்கள் அனுப்புவதையும் தவிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு உதவிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

birthday relief kanimozhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe