Advertisment

மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணம் உயர்வு... தமிழக அரசு அரசாணை! 

Relief for fishing ban increased to 6,000 ... Government of Tamil Nadu!

தமிழகத்தில் மீன்பிடிதடைக்காலத்தில்மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூபாய் 5ஆயிரத்திலிருந்துரூபாய் 6 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தேர்தல் வாக்குறுதியின்அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் 14 கடலோர மாவட்டங்களில் 1.80 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக நடப்பாண்டில் மொத்தம் 108 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த நிவாரணத் தொகை நேரடியாக மீனவர்களின்வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ்தமிழகத்தைச்சேர்ந்த 2.9 லட்சம் மீனவ மகளிருக்கு அவர்கள் செலுத்திய பங்கு தொகையுடன் அரசு வழங்கும் நிவாரணத்தொகையானமூன்றாயிரத்தையும் சேர்த்து4,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக அரசின்பங்குத்தொகையாக62.80 கோடி ரூபாய்க்கு நிதி ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

relief TNGovernment fisherman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe