Skip to main content

பணியின் போது இறந்த காவலர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்!

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

Relief to the family of the guards who died on duty!

 

பணியின்போது மரணம் அடைந்த போலீசாரின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திருச்சியில் பணியின்போது இறந்த 9 போலீஸாரின் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

 

பாலக்கரை போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்த தமிழ்ச்செல்வன், விபச்சார தடுப்பு பிரிவில் பணிபுரிந்த ஆரோக்கியசாமி, கே.கே.நகர் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்த வின்சென்ட், அரியமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்த குணசேகரன், மகேஷ்வரி, வெடிகுண்டு தடுப்பு பிரிவில் பணிபுரிந்த உறையூர் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்த பாலசுப்பிரமணியன் ஆகியோர் பணியின்போது மரணமடைந்தனர். இவர்களுடைய குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 27 லட்சம் நிவாரண நிதியை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வழங்கினார்.

 

சார்ந்த செய்திகள்