Skip to main content

ஏரியில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு 

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

Relief announcement to the family of 4 students who drowned in the lake

 

சேலம் மற்றும் கடலூரில் நீர் நிலையில் குளிக்க சென்ற மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

கோடைக்காலம் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு இடங்களில் குளம் மற்றும் ஏரிகளில் குளிக்கச் செல்லும் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

அண்மையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கல்வடங்கம் காவிரி ஆற்றில் 10 கல்லூரி மாணவர்கள் குளிக்கச் சென்ற நிலையில் அதில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதேபோல் கடந்த 15ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நொய்யலாற்றில் குளிக்கச் சென்ற இரு பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்திருந்தது. தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி  சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே பாலாஜி, பிரசாந்த்  என்ற 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஏரியில் நீச்சல் பழகிக் கொண்டிருந்த பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

 

Relief announcement to the family of 4 students who drowned in the lake

 

அடுத்த நாளான 23 ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வி.குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் குளித்துக் கொண்டிருந்த இன்பராஜ் (8), தினேஷ் (14) ஆகிய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாணவர்கள், சிறுவர்கள் நீர்நிலைகளில் உயிரிழப்பது தொடர்கதையாகி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் சேலம் கன்னங்குறிச்சி ஏரியில் மூழ்கி உயிரிழந்த பாலாஜி, பிரசாந்த் ஆகிய மாணவர்கள் குடும்பத்திற்கும், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இன்பராஜ், தினேஷ் ஆகிய மாணவர்களின் குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், நான்கு மாணவர்களின் குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்