Advertisment

வெளியான அதிர்ச்சி வீடியோ; தேனி மருத்துவக் கல்லூரி டீன் அதிரடி சஸ்பெண்ட்

 Released video; Theni Medical College Dean Suspended

தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisment

தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மீனாட்சி சுந்தரம் மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் மாரிசாமி என்பவரிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் விசாரணையில் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் பெற்றது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து டீன் மீனாட்சி சுந்தரத்தை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் மீனாட்சி சுந்தரம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் மா.சுப்பிரமணியன் ஆணை பிறப்பித்துள்ளார்.

Advertisment

Bribe Theni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe