Advertisment

வெளியானது 'வலிமை சிமெண்ட்' - விலை எவ்வளவு தெரியுமா?

 Released 'Valimai Cement'-Do you know how much it costs?

Advertisment

தமிழ்நாடுஅரசு சார்பில் ‘வலிமை’ என்ற பெயரில் குறைந்த விலை சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலிமை சிமெண்டினை அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

கரோனாவிற்குப் பிறகு கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக சிமெண்ட் விலை உயரும் என சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து, தமிழ்நாட்டில் அரசு சார்பில் 'வலிமை' என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகம் செய்யப்படும் எனத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இந்த சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலிமை சிமெண்டினை அறிமுகம் செய்துவைத்துள்ளார். டான்செம் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்த மலிவு விலை சிமெண்ட், ஒரு மூட்டை 360 ரூபாய்க்கு விற்கப்பட இருக்கிறது. இதன்மூலமாக சிமெண்டின் சில்லறை விற்பனை விலை சந்தையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNGovernment cement valimai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe