பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ்; இளைஞர் கைது

 Released with Pattakathi; Youth arrested in Madurai

மதுரையில் பட்டாக்கத்தியைக் கையில் வைத்து ஆபத்தான முறையில் வேகமாக சுழற்றி வீர சாகசம் புரிவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்மைக்காலமாகவே பிறந்தநாள் விழாக்களில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவது, அரசு பேருந்துகளில் பயணிக்கும் பொழுது பட்டாக்கத்தியை சாலையில் உரசி தீப்பொறி வர வைப்பது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் பயங்கரஆயுதங்களுடன் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு அதனை சமூக வலைதளங்களான இன்ஸ்டாக்ராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் வெளியிட்டு வருவது வைரலாகிவருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் மதிச்சியத்தைச் சேர்ந்த அஜீத் என்ற இளைஞர் பட்டாக்கத்தியை வைத்து வீர சாகசம் செய்வது போல வேகமாக கத்தியை சுழற்றுவது மற்றும் இளைஞர்களைத்தாக்குவதைப் போன்று வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், இது தொடர்பாக மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். தற்போது இளைஞர் அஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

madurai police
இதையும் படியுங்கள்
Subscribe