Advertisment

எஸ்.பி.பிக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை வீடியோ வெளியீடு!

 Release of treatment video given to Spb

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பிஉடல், நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளன நிலையில்,அவரது உடல் தற்பொழுது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இன்று இரவு முழுவதும் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல், அவரது உடலுக்குக்கட்டுப்பாடுகளுடன் இறுதி அஞ்சலி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவசிகிச்சையில்இருந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிசியோதெரபி சிகிச்சையின் போது அவருக்கு மருத்துவர்கள் பயிற்சி வழங்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

corona virus hospital spb Treatment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe