/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madurai-aims.jpg)
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது.
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்காகத்தலைவர், செயல் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சில குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எந்த ஒரு பணிகளும் நடைபெறாத நிலையில், பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் விரைவில் கட்டுமான பணியைத்தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. மருத்துவமனையைக் கட்டுவதற்குத்தகுதியுடைய ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான பணிகளை 33 மாதங்களில் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது திமுக எம்.பி.க்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)