Advertisment

நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை வெளியீடு!

Release of the report submitted by Judge AK Rajan panel on NEET examination!

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவைத் தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி அமைத்திருந்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்து அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது. நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்த நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு கடந்த ஜூலை 14 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்படி 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.

Advertisment

இந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே. ராஜன், ''நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் மொத்தம் 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என்றே கருத்து தெரிவித்துள்ளனர். மற்றபடி ஆய்வு தொடர்பான தகவல்களை நாங்கள் சொல்லக்கூடாது. சொன்னால் தப்பாகிவிடும். அதைச் சொல்வதற்கான அதிகாரமும் எங்களிடம் இல்லை. நீட் தேர்வின் தாக்கம் எப்படி இருக்கிறது என ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆய்வு செய்து நீட் தேர்வு பொதுமக்கள் மத்தியில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற அறிக்கையைக் கொடுத்துவிட்டோம். நீங்கள் மற்ற விவரங்களை அரசிடம்தான் கேட்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

கடந்த 12 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் (செப்.13) சட்டமுன் வரைவு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு சமர்ப்பித்த நீட் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நீட் தேர்வை ரத்து செய்யத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். நீட் தேர்வை ரத்து செய்யத் தனியாகச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம். நீட் தேர்வை ரத்து செய்யத் தனிச் சட்டம் இயற்றுவதன் மூலம் மருத்துவ சேர்க்கையில் சமூக நீதி உறுதி செய்யப்படும். மருத்துவ மாணவர் சேர்க்கையை 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்திட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

neet exam TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe