
மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீகிதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அண்மையில் தமிழக ஆளுநர் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5%ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
6-ஆம்வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 12 ஆம் தேதி,மாலை 5 மணிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க, தலைமை ஆசிரியர்கள்வழிகாட்ட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை தரவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களைக் கையொப்பம் பெற்று வர அலைக்கழிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்7.5 உள்ஒதுக்கீடு மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் நலன் கருதி காலதாமதமின்றி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)