Skip to main content

'கைதிகளை விடுதலை செய்' – த.மு.மு.க போராட்டம்

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

'Release prisoners' - tamilnadu muslim munnetra kalagam


கடந்த 10 வருடத்துக்கும் மேலாக எந்த விசாரணையுமின்றி சிறையில் வாழும் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் செப்டம்பர் 8ம் தேதி நடைபெற்றது.


இந்த மறியல் போராட்டத்தில் மொத்தமாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு, விசாரணை நடத்தாமல் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனக்கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.

'Release prisoners' - tamilnadu muslim munnetra kalagam


கரோனா காலத்தில் கூட்டம் கூடக்கூடாது, அனுமதி பெறாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் போன்ற காரணங்களை கூறி மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வேன்களில் ஏற்றிச்சென்று அருகில் உள்ள மண்டபங்களில் அடைத்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பின்னர் விடுவித்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை பறிக்கும் திமுக அரசு” - இ.பி.எஸ் கண்டனம்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

EPS condemns DMK government for taking away religious rights of jail inmates

 

“தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறைச் சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல, அவர்களை நல்வழிப்படுத்தும் இடங்களுமாகும். கடந்த 29 மாத திமுக ஆட்சியில், சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக செய்திகள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதாக நாளிதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

 

எந்த மதத்தைச் சார்ந்த சிறைக் கைதியாக இருந்தாலும், ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு வழிபாட்டு உரிமைகள் வழங்கப்பட்டு வந்தன. குறிப்பாக, வேலூர் மத்திய சிறைச் சாலையில் காலம் காலமாக இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகள், அவர்களுடைய மத நம்பிக்கையின்படி வழிபடுவதற்கு பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும் இந்த நடைமுறை தொடர்ந்தது.

 

அந்தந்த மத குருமார்கள், பண்டிகை காலங்களில் சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு சிறப்புப் பிரார்த்தனை செய்து நல் எண்ணங்களை வளர்க்கவும், கைதிகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், சிறைவாசிகளிடையே இந்த வைரஸ் தொற்று பரவக்கூடாது என்பதால், சிறைச் சாலைகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது.

 

இந்த திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின்பு, கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகும் ஏதோ ஒரு காரணத்தால் சிறைகளில் மத வழிபாடுகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் வேலூர் (தொரப்பாடி) மத்திய சிறைச் சாலைக்குள் மூன்று வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. அதில் இரண்டு மத வழிபாட்டுத் தலங்களை தற்போது வழிபாட்டுக்கு அனுமதித்துவிட்ட சிறை நிர்வாகம், இஸ்லாமிய சிறைவாசிகள் தொழுகை நடத்தும் மசூதியை மட்டும் திறக்காமல் மூடி வைத்துள்ளது. இதனால், வேலூர் சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

 

திமுக ஆட்சியாளர்கள், சிறைவாசிகள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். எனவே, தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று இந்த  திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Next Story

நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக்கோரி சிறை நிரப்பும் போராட்டம்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Jail-filling struggle for early release of long-term lifers

 

நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், சேலம் மத்திய சிறை முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

 

அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை இதில் முன்வைக்கப்பட்டது. மேலும் இச்சிக்கல் தீரும்வரை சம்மந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு நீண்ட சிறைவிடுப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. வழக்கு, சாதி மற்றும் மதத்தின் பெயரால் இதில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. 

 

தலைமை ஒருங்கிணைப்பாளர் கேப்டன் செய்யது முகம்மது பாருக் தலைமையில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தை இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ உரையாற்றி தொடங்கி வைத்தார். துணைப்பொதுச்செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்கள் முழக்கங்களை எழுப்பினார். aமஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு ஆகியோர் கோரிக்கை உரையாற்றினர்.