தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,885ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில்60 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,020 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் தமிழகத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adfAFVGB.jpg)
இந்நிலையில் கரோனா உறுதியாகிசிகிச்சை பெற்றுவரும்நோயாளிகளுக்கு தரப்படும் உணவு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.அதன்படிகாலை4 மணிக்கு ரொட்டி,பிஸ்கட்.4.30மணிக்கு கபசுரக் குடிநீர்.இரவு 7 மணிக்கு பால்,வாழைப்பழம். இரவு ஒன்பது முப்பது மணிக்கு சாதம், சாம்பார், ரசம், பொரியல், முட்டை. இரவு 10 மணிக்கு சிறிதுபூண்டுடன்பால்.
இதர நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கு காபி, பிஸ்கட்.காலை8.30 மணிக்கு இட்லி சாம்பார் வழங்கப்படுகிறது.காலை 10 மணிக்கு கபசுரக் குடிநீர், காலை11மணிக்கு வேகவைத்த சுண்டல்/வேர்க்கடலை, எலுமிச்சைச்சாறு (உப்பு/சர்க்கரை) வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.அதேபோல்கரோனாபாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும்ரமலான் நோன்பு கடைப்பிடிப்போருக்குஅதற்கு தகுந்தார்போல் உணவுகள் வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)