தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின் முன்பும் பாமக தனது கட்சியின் சார்பாக நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும். அந்தவகையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள அக்கார்ட் ஓட்டலில் பாமகவின் 20வது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். இதில், ஜி.கே. மணி, ஏ.கே மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.