Advertisment

தளர்வுகளா... கட்டுப்பாடுகளா...? - முதல்வர் தலைமையில் துவங்கியது ஆலோசனை!

CORONA
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. ஊரடங்கைத் தளர்த்துவதுஅல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதுகுறித்து இன்று (10.06.2021) மீண்டும் தமிழ்நாடு முதல்வர்,சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.இந்த ஆலோசனையில் மருத்துவத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
Advertisment
சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்களை தமிழ்நாடு முதல்வர் ஆய்வுசெய்துவருகிறார். 37 ஆயிரம்வரை இருந்த ஒருநாள் கரோனா தொற்று, நேற்று 18 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுஊரடங்கிற்கு கிடைத்த பலன் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்வதற்கு இ-பதிவு கட்டாயமில்லை என்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகளுக்கு நேரக் கட்டுப்பாட்டுடன் கூடிய அனுமதி வழங்கப்படும் எனவும், பொது போக்குவரத்திற்கான தடை நீடிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனைக்குப் பிறகான முடிவுகள் நாளை தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisment
meetings TNGovernment Tamilnadu corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe