Skip to main content

இது தளர்வா அல்லது முழு விலக்கா?... இது கொண்டாடத்திற்கான நேரமல்ல - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

This is relaxation or complete exclusion; this is not the time for celebration ...- Chennai High Court question!

 

ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. முறையான காரணம் இல்லாமல் வெளியே வருவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

சிவா என்ற இளைஞர்கள் நல ஆர்வலர், தெரு விலங்குகளுக்கு உணவுகள் வழங்க வேண்டும். ஊரடங்கில் விலங்குகள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அறிக்கையில், விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டுவருவதாகவும், இதற்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அந்தப் பிரதான வழக்கை 3 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

 

அதன்பிறகு தலைமை நீதிபதி அமர்வு அரசு தலைமை வழக்கறிஞரை அழைத்து, தற்போது ஊரடங்கு தளர்வுகள்தானே அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் முழு ஊரடங்கையும் விலக்கிக்கொண்டது போல மக்கள் வெளியில் வரத் தொடங்கியுள்ளனர். இது கொண்டாட்டங்களுக்கான நேரமில்லை. அதேசமயம் தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கொண்டாடுகின்ற நேரம் இல்லை என மக்கள் உணரும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவுரைகள் வழங்க வேண்டும் என தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.

 

This is relaxation or complete exclusion; this is not the time for celebration ...- Chennai High Court question!

 

கரோனா முதல் ஊரடங்கில் பொதுமக்களிடம் காவல்துறை கடுமையாக நடந்துகொண்டது. அப்போது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பல பிரச்சினைகள் உருவானது. எனவே இந்த ஊரடங்கில் அவ்வாறு கடுமை காட்டக்கூடாது என தமிழ்நாடு அரசு காவல்துறைக்கு அறிவுறுத்தியிருந்தது. அதை பொதுமக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டு வெளியில் அதிகமாக சுற்றுகின்றனர் என நீதிபதியிடம் தலைமை வழக்கறிஞர்  விளக்கமளித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  மக்கள் சிரமப்படக் கூடாது. அவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியில் சுற்றக்கூடாது. இதற்கான முழு பொறுப்பும் அரசிடம்தான் உள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். வெளியில் சுற்றுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.

 

 

சார்ந்த செய்திகள்