ஊரடங்கில் தளர்வுகள்... நாளை முதல்வர் ஆலோசனை!

Relaxation in curfew ... Chief Minister's advice tomorrow!

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்துவருவதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டங்கள் 1, 2, 3 என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.இதில் முதல் வகையில் இருக்கும் 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படவில்லை. வகை 2, வகை 3 இருக்கும் மாவட்டங்களுக்குத் தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தன.

குறிப்பாக வகை மூன்றில் உள்ள நான்கு மாவட்டங்களில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) 50 சதவீதம் இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், மேலும் புதிய தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக நாளை (25.06.2021) முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடக்க இருக்கிறது. நாளை காலை 11 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

lockdown TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe