Relaxation in curfew ... Chief Minister's advice today!

Advertisment

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் நிலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் இருக்கும் நிலையில், இன்று (02.07.2021) முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை நடத்த இருக்கிறார்.மாவட்டங்கள் ஒன்று, இரண்டு, மூன்று என மொத்தம் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது.

புதிய தளர்வுகள் வழங்குவது தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெற இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசிக்க இருக்கிறார். தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதியுடன் முடியும் நிலையில் இந்த ஆலோசனை இன்று நடைபெறுகிறது.