Relatives siege protest on  NLC worker incident

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் என்ற நிலக்கரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சுரங்கம் 1, சுரங்கம் - 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், நெய்வேலி அருகே புது இளவரசன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன்(42) என்ற தொழிலாளி இன்று வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த போது கன்வேயர் பெல்ட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட, சக தொழிலாளர்கள், அன்பழகனி உடலை மீட்டு வெளியே கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றினர்.

Advertisment

அப்போது, அன்பழகனின் உறவினர்கள் மற்ற தொழிலாளர்களும் ஆம்புலன்சை வழிமறித்து கதறி அழுதனர். மேலும், அவர்கள் நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.