காயங்களுடன் தூக்கில் கிடந்த மாணவி... உறவினர்கள் சாலை மறியல்

theni

தேனியில் கல்லூரி மாணவி ஒருவர் காயங்களுடன் தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நிவேதிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை முதல் மாணவியைக் காணவில்லை எனப் பெற்றோரும்உறவினர்களும் ஊர் முழுக்க தேடி வந்துள்ளனர். ஆனால் இறுதியில் காணாமல் தேடப்பட்டுவந்த மாணவி தோட்டத்து வீட்டில் காயங்களுடன்தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் மாணவியை யாரோ அடித்துக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகித்த உறவினர்கள் மற்றும் அவரது பெற்றோர் தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

girl police student Theni
இதையும் படியுங்கள்
Subscribe