Skip to main content

மணல் திருடும் ஒபிஎஸ் உறவினர்கள்!  காவல் நிலையத்திற்கு வந்த மாட்டு வண்டி!!

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
ops

 

துணை முதல்வர் ஓபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் உள்ளது கொட்டகுடி ஆறு. இந்த ஆற்று தண்ணீர் தான் போடி நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருவதுடன் மட்டுமல்லாமல் போடியை சுற்றியுள்ள விவசாயிகளுக்கும் இந்த கொட்டகுடி ஆற்று தண்ணீர் பயன் பட்டு வருகிறது. இப்படி பொதுமக்களுக்கும். 

 

விவசாயிகளுக்கும் பயன் பட்டு வரும் இந்த கொட்டகுடி ஆற்றிலிருந்து தினசரி திருட்டு தனமாக டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் 200க்கு மேற்பட்ட மணல் லோடுகள் கடத்தப்பட்டு ஒரு லோடு மணல் 3ஆயித்திலிருந்து 5ஆயிரம் வரை விற்று வருகிறார்கள். இதனால் அந்த கொட்டக்குடி ஆற்றை சுற்றியுள்ள கேணிகளில் நீர் வரத்து குறைந்து விவசாயம் செய்ய முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். அதோடு மணல் திருடுபவர்களை பற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் கூட எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை அந்த அளவிற்கு கொட்டக்குடி  ஆற்றில் மணல் திருடுபவர்களில் பெரும்பாலானோர் துணை முதல்வர் ஒபிஎஸ் -சின் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் உறவினராகவும் இருந்து வருகிறார்கள். அதனாலேயே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறார்கள்.

 

இந்த நிலையில் தான் போடி டவுன் இன்ஸ்பெக்டர் சேகர் அதிரடி நடவடிக்கை எடுத்து இரண்டு மாட்டு வண்டிகளில் திருடி சென்ற மணலையும், மாடுகளையும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். இந்த விஷயம் ஓபிஎஸ் காதுக்கு எட்டவே உடனே மணல் திருடுபவர்களை விட்டு விட்டார். ஆனால் மாடுகளுக்கு தீவணம் போடாமல் கட்டி இருப்பதை கண்டு அப்பகுதியில் உள்ள மக்கள் சத்தம் போடவே கடைசியில் மாடுகளையும் காக்கிகள் அவிழ்த்து விட்டனர். ஆனால் இந்த விஷயம் நகரில் உள்ள மக்களுக்கு தெரிந்ததின் பேரில் பெயர் அளவில் இன்ஸ்பெக்டர் பைன் போட்டு இருக்கிறார். இப்படி ஒபிஎஸ் உறவினர்களே திருட்டுக்கு துணை போய் வருவது தான் வேதனையாக இருக்கிறது என்று நகர மக்கள் மத்தியில் புலம்பியும் வருகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்