மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
3-வது நாளான இன்று மாலையில் கலைஞரின் தனி செயலர் ராஜமானிக்கம் மற்றும் மு.க.தமிழரசின் மனைவி மோகன தமிழரசி, கலாநிதியின் சகோதரி அன்பு கரசி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும், செல்வியின் மகன் மற்றும் பேத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.செல்வி, துர்கா ஸ்டாலின், கலாநிதி மாறன் அம்மா, செல்வியின் உறவினர்கள் ஆகியோர் வந்து மலர் தூவி அஞ்சலி செய்தனர். அஞ்சலி செலுத்திவிட்டு சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து சென்றனர்.









Follow Us