The woman who married her boyfriend .. The relatives who looted the house ..!

நாகை அருகே காதல் விவகாரத்தில் வீட்டை அடித்து நொறுக்கிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரை கைது செய்துள்ளனர் போலீஸார்.

Advertisment

நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள மடப்புரம் தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிவீரமணி. இவர் வீட்டில் நாகக்குடையான் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதேபகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ராஜாத்தி என்கிற பெண்ணை காதலித்திருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில், கடந்த 24ம் தேதி அந்தப்பெண் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். அந்தப் பெண்ணின் தந்தை தனது பெண்ணை காணவில்லை எனத் திருக்குவளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான அந்த பெண்ணோ, தான் காதலித்த சுப்பிரமணியனையே திருமணம் செய்து கொண்டேன்; என்னை யாரும் கடத்தவில்லை எனக் கூறியுள்ளார்.

The woman who married her boyfriend .. The relatives who looted the house ..!

இதனால் ஆத்திரமடைந்த சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள் 10 பேர் ஜோதிவீரமணி என்பவரது வீட்டிற்குச் சென்று, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, வீட்டில் உள்ள சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கி சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜோதிவீரமணி அளித்த புகாரின் பேரில் வீட்டை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி, மகள்கள் கவிதா, புவனேஸ்வரி, மருமகன் செந்தில், முருகுபாண்டி, தங்கமணி, ஜெயலலிதா, ஓம் முருகா, அய்யப்பன், ராஜேஸ்வரி ஆகிய 10 பேர் மீது திருக்குவளை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ஜெயலலிதா (45) மற்றும் அய்யப்பன் (25) ஆகிய இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 8 பேரையும் தேடி வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.